இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் 55 ரூபாயும் அதிகரித்து அந்நாட்டு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக ஒரு லிட்டர் 254 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 45 சதவிகிதம் அதிகரித்து 176 ரூபாயாகியுள்ளது.
இலங்கை அரசிடம் இருந்து சிலோன் பெட்ரோலியம் நிறுவனம் மானியம் பெறும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் மானியம் ஏதும் பெறுவதில்லை. எனவே, அதன் இறக்குமதி மற்றும் உற்பத்தி செலவுகளுக்கேற்ப இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது
இலங்கையில் இந்திய ரூபாய்க்கு எதிரான அந்நாட்டு கரன்சி மதிப்பு 30 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அன்னியச் செலாவணி கையிருப்பும் குறைந்து கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எனவே, வருவாய் இழப்பை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையை இலங்கை அரசு கடுமையாக அதிகரித்துள்ளது.