தொடர்ந்து ஒலிக்கும் அபாய எச்சரிக்கை... பீதியில் மக்கள்

கீவ் நகரை ரஷ்ய படைகள் நெருங்கியுள்ள நிலையில் மற்ற அனைத்து நகரங்களிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
தொடர்ந்து ஒலிக்கும் அபாய எச்சரிக்கை... பீதியில் மக்கள்

உக்ரைனில் 18-வது நாளான இன்று தாக்குதல் உச்சம் தொட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணைகளும் பீரங்கி குண்டுகளும் எண்ணெய் கிடங்குகள், உணவு சேமிப்பு கிடங்குகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் என வரைமுறையின்றி அனைத்து இடங்களையும் தாக்கி அழித்து வருகின்றன.

தலைநகர் கீவ்-தான் முக்கிய குறி என்றாலும் மற்ற நகரங்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை. கார்கீவ், லுவ்,கிராமடோர்ஸ்க், ஸ்லோவியன்ஸ்க், வின்னிட்சியா, பொல்டாவா, சைட்டோமிர், ஒடேசா, செர்னோமோர்ஸ்க், செர்னிஹிவ் செர்காசி மற்றும் சுமி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் குண்டு மழை பொழிகிறது. அனைத்து நகரங்களிலும் ஒலிக்கும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய ஒலி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

போர் முடிந்து திரும்பி வந்தால் மக்கள் குடியேற வீடுகளே இல்லை என்ற அளவிற்கு கார்கீவ் நகரம் சிதைக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறக் கூட அனுமதிக்காமல் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைன் அதிபர் புகார் கூறி வருகிறார். ஆனால், விதிமுறைகளை மீறவில்லை என்று விளக்கமளித்து வரும் ரஷ்யா, கீவை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com