துருக்கியில் நடைபெறவுள்ளது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை...

உக்ரைன் - ரஷியா இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கியில் நடைபெறவுள்ளது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை...

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றுடன் 34-வது நாள் கடந்துவிட்டது. ஆனாலும் உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் பல நகரங்களை சுற்றிவளைத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. எனினும் ரஷிய படைகளுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் ஈடு கொடுத்து போரிட்டு வருகிறது.

ரஷியாவின் தாக்குதலால், பொதுமக்கள் பலரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 39 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருவதாக ஐ.நா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் நேற்று நடைபெற்ற நிலையில், உக்ரைன் ரஷியா இடையே யான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com