ஹிஜாப் தீர்ப்புக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ஹிஜாப் தடை குறித்து தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் பதற்றமாக சூழலுக்கு மத்தியில் இன்று உடுப்பி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
ஹிஜாப் தீர்ப்புக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கர்நாடக மாநிலம் உடுப்பி பள்ளி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் பள்ளி கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவித்தது. மேலும் கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சீருடையை அணிந்து வர மாணவர்கள் மறுப்பது ஏற்புடையதல்ல எனவும் இஸ்லாமிய சட்டபடி ஹிஜாப் அணிவது அவசியமானதல்ல எனவும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த உடுப்பி மாவட்டம் உள்ளிட்ட பிற பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் உடுப்பி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. ஹிஜாப் தடை குறித்த தீர்ப்புக்கு எதிராக உடுப்பு பள்ளி மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால் பேரணி மற்றும் கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று உடுப்பியில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அங்கு கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com