இணைய வழியாக ரஷ்யா-உக்ரைன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளிடையேயான 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இணைய வழியாக ரஷ்யா-உக்ரைன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை

கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு நடுவில் சுமுக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்ட பேச்சுவார்த்தைகள் பெலாரஸில் நடைபெற்ற நிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையேயான 4-வது கட்ட பேச்சுவார்த்தை ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இதிலாவது சுமுக தீர்வு கிடைக்குமா என்பது உறுதியில்லாத ஒன்றாக உள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக அமெரிக்காவும் சீனாவும் ரோம் நகரில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஆலோசகர் யங் ஜெய்ச்சி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் உக்ரைன் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்தால் பொருளாதாரத் தடைகளுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com