
இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்தியா வந்துள்ளார். நேற்று கிஷிடா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு ஜப்பான் பிரதமர் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு சமரசம் செய்ய வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு ஆயுத தாக்குதலில் ஏற்பட்ட விளைவுகளை அனுபவித்த தேசம் என்கிற அடிப்படையில் மீண்டும் ஒரு அணு ஆயுத தாக்குதல் நிகழாமல் தடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஜப்பான் பிரதமர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.