
ஒமிக்ரான் தொற்றின் வேகம் குறைந்து வரும் சூழலில், புதிதாக ஒமிக்ரானின் கலப்பின திரிபு ஒரு சில நாடுகளில் பரவத்தொடங்கியுள்ளது. இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலும் எக்ஸ்.இ கலப்பின திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்தநிலையில், ஒமிக்ரானில் இருந்து புதிய மாறுபாடுகள் தோன்றி வருவதாக குறிப்பிட்ட நிதிஆயோக் தலைவர் என்.கே அரோரா, புதிய கலப்பு வகை திரிபு வந்து கொண்டே தான் இருக்கும் என்றும், இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்
கொண்டுள்ளார்.
மேலும் இந்த திரிபால் பெரிய பாதிப்பு இல்லை என்பதோடு, தற்போதைய தரவுகள் அடிப்படையில் இந்தியாவில் இந்த தொற்று அதிகம் பரவவில்லை எனவும் கூறியுள்ளார்.