மு.க ஸ்டாலினை சந்திக்கவுள்ள முன்னணி நிறுவன தலைமை நிர்வாகிகள்

துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வணிக மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மு.க ஸ்டாலினை சந்திக்கவுள்ள முன்னணி நிறுவன தலைமை நிர்வாகிகள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு துபாய் வெளியுறவு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். பின்னர் ஏ.ஆர்.ரகுமானின் அழைப்பின் பேரில் அவரது இசை அரங்கிற்கு சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு பின், துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சாதக அம்சங்கள் குறித்து அவர்களிடம் விளக்குவார் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாலையில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com