முதல் 5 லட்சம் சர்வ தேச பயணிகளுக்கு இலவச விசா -மத்திய அரசு

சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
முதல் 5 லட்சம் சர்வ தேச பயணிகளுக்கு இலவச விசா -மத்திய அரசு

நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர், உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாகவும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், பயண கட்டுப்பாடு காரணமாகவும் சுற்றுலாத்துறை அதிகப்படியாக பாதிப்படைந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், சுற்றுலாத்துறையில் கொரோனா பரவலுக்கு முன்பு 3.8 கோடி பேர் பணியாற்றி வந்ததாகவும், ஆனால் கொரோனாவின் 3 அலைகளுக்குப் பிறகு சுமார் 2.15 கோடி பேர் வேலை இழந்துவிட்டதாகவும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முதல் அலையில் 93 சதவீதமும், இரண்டாவது அலையில் 79 சதவீதம், மூன்றாவது அலையில் 64 சதவீதமும் குறைந்து விட்டதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட சுற்றுலா துறை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பயண ஏஜென்டுகள் மற்றும் சுற்றுலா பொறுப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரையும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இதையடுத்து, சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com