சீனாவில் மீண்டும் கோர தாண்டவம் ஆடும் கொரோனா

சீனாவில் ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் கோர தாண்டவம் ஆடும் கொரோனா

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நாளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதன்படி சீனா தற்போது கடுமையான வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்கிறது.

கிட்டத்தட்ட 19 மாகாணங்கள் ஓமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனாவை பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதால், ஷாங்காயில் பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜிலின் நகரத்தில் பகுதியளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான சுற்றுப்புறங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com