நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வின் 5ம் நாளில் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியவுடன் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சீன விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
நேற்றைய தினம் சீனாவின் குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு 133 பயணிகளுடன் சென்ற உள்நாட்டு பயணிகள் விமானம் குவாங்ஸி மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது; இது வரை தொடர்ச்சியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு தொடர்பான எந்த ஒரு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. மேலும் உடல்கள் கண்டெடுக்கப்படவில்லை என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சீனா உடைய ஊடகங்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த குடும்பத்தினருக்கும் சீனாவிற்கும் ஆழ்ந்த இரங்கலை பல்வேறு உலக நாடுகள் தெரிவித்துள்ளது; 2010ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்து இவையாகும். இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வின் 5ம் நாளில் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியவுடன் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சீன விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை அவை நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடங்கியது.