வருகிற அக்டோபர் மாதம் பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஒருதரப்பு அரசியல் கட்சியினர் சார்ந்து கருத்துக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலியான தகவல்களை பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு டெலிகிராம் செயலிக்கு எச்சரிக்கை விடுத்தது.
பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் டெலிகிராம் செயலி எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அந்த செயலிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து அறிவித்துள்ளது.
இதையடுத்து தங்கள் அலட்சியத்திற்கு தான் பிரேசில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் பாவெல் துரோவ் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் தாங்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தயராக இருப்பதாக பிரேசிலில் உள்ள டெலிகிராமின் வழக்கறிஞர் ஆலன் தாமஸ் குறிப்பிட்டார்.
டெலிகிராம் எஸ்எம்எஸ், இமெயில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதள தகவல் பரிமாற்ற வசதிகள் பயன்பாட்டில் உள்ளது. இதன்காரணமாக தந்தி என்ற சேவை கேள்விபட்ட ஒன்றாகவே மாறிவிட்டது என கூறலாம்.