
உக்ரைனில் நடைபெறும் போரினால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பி உள்ள 20 ஆயிரம் மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயில கல்வி நிறுவனங்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவன இயக்குனர்களுக்கும், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் ஏஐசிடிஇ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போரினால் பாதிக்கப்பட்டு இந்தியா வந்துள்ள மாணவர்கள் அவர்களது கல்வி எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் விரக்தியில் உள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று அதன் பேரில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்ககூடாது என்பதால், இந்தியாவில் கல்வியைத் தொடர விரும்பும் அனைவருக்கும் அனைத்து கல்வி வாய்ப்புகளையும் அரசு எளிதாக்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பைத் தொடர, அந்தந்த ஆண்டுகளில், கல்வி நிறுவனங்களில் உள்ள காலி இடங்களுக்கு பொருத்தமான நிலைகளில் உள்ள மாணவர்களை சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.