செப்டம்பரில் அறிமுகமாகிறதா ஆப்பிள் ஐபோன் 14 ??

செப்டம்பரில் அறிமுகமாகிறதா ஆப்பிள் ஐபோன் 14 ??

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் ஆப்பிளஅ நிறுவனம் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வாட்ச் 8, பட்ஜெட் விலையில் வாட்ச் SE மற்றும் புதிய வாட்ச் எக்ஸ்டிரீம் எடிஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபோன் 14 அறிமுக நிகழ்விலேயே வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உயரமான ப்ரோபைல், சிறப்பான கேமரா மாட்யுல்கள் இடம்பெற்று இருக்கலாம். இரு ப்ரோ மாடல்களிலும் மூன்று கேமரா சென்சார்கள், 48MP வைடு, 12MP அல்ட்ரா வைடு மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம்.

இத்துடன் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடலில் 8K வீடியோ வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலில் அதிகபட்சமாக 8GB ரேம், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் உடலின் வெப்பநிலையை கணக்கிடும் அம்சம் வழங்கப்படலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com