இந்திய மருத்துவமனைகளை நாடி வெளிநாட்டு நோயாளிகள் அதிகம் வருவதுஏன்?

இந்திய மருத்துவமனைகளை நாடி வெளிநாட்டு நோயாளிகள் அதிகம் வருவதுஏன்?

ஜுவான் ஃபிரான்சிஸ்கோ பலாதினெஸ் என்பவர் கண்களுக்கு எல்லாம் இரண்டு இரண்டாகத் தெரியத் தொடங்கியபோதே தனது உடலில் ஏதோ பிரச்னை எனப் புரிந்துகொண்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் தோன்றிய இரட்டைப் பார்வை உட்பட, மூளைக் கட்டியால் ஏற்பட்ட அறிகுறிகளை மருத்துவர்கள் அவரிடம் கூறினார்கள்.

சிலியின் சான்டியாகோவைச் சேர்ந்த 56 வயதான தொழிற்சாலை பொறியாளரான அவர், "இது என் வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணம். அதிர்ஷ்டவசமாக, எனக்குப் பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்," என்கிறார்.

அவருடைய கட்டியின் அசாதாரண வடிவம் காரணமாக அதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரிடம் கூறினார்கள். ஆனால், கதிர்வீச்சு சிகிச்சையின் முதல் கட்டம் முடிந்த பிறகு அவருக்கு இருந்த அறிகுறிகள் மறைந்துவிட்டன.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்கள், மூளையில் இருந்த கட்டி வளரவில்லை என்பதைக் காட்டின. "எல்லாம் நன்றாக நடந்தது. நான் இதை முழுமையாக மறந்துவிட்டேன்," என்று அவர் கூறுகிறார்.வணிகம்

சராசரியாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள பெரும்பாலான ஒப்பனை சிகிச்சைகளின் விலை இந்தியாவில் செய்யப்படுவதை விட குறைந்தது 50% அதிகமாக இருப்பதாக மருத்துவர் பாட்டியா கூறுகிறார்.

பெரும்பாலான பயணங்களைப் போலவே, தொற்றுநோய் பேரிடரின் போது மருத்துவ சுற்றுலாவும் நிறுத்தப்பட்டது. ஆனால், வணிகம் மீண்டும் உயர்ந்து வருவதாகவும் அது தொடர்ந்து வளரும் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், வெளிநாட்டு நோயாளிகளின் அதிகரிப்பில் சில சிக்கல்களும் இருக்கின்றன.

"இந்தியா முழுவதும் புதிய அழகியல் மருத்துவமனைகள் காளான்களாக வளர்ந்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இது எளிதில் பணம் சம்பாதிக்க விரும்பும் தகுதியற்ற மற்றும் பயிற்சி பெறாத மருத்துவர்களையும் ஈர்க்கிறது," என்கிறார் மருத்துவர் பாட்டியா.

மருத்துவரின் நற்சான்றிதழ்கள் மற்றும் அனுபவத்தை ஆராய்ந்த பிறகு அவரை சந்தியுங்கள் என்று மருத்துவர் பாட்டியா அறிவுறுத்துகிறார்.

சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பிற்கும் போதுமான ஏற்பாடுகள் உள்ளனவா என்பதை நோயாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்கிறார் சென்னை அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் சங்கர் வங்கிபுரம்.

"இந்தியாவில் சிகிச்சைக்குப் பின், சில நேரங்களில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் பிரச்னையைக் கண்டறியும் கருவிகள் இல்லாததால், நச்சுத்தன்மையைக் கண்காணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com