பிராட்பேண்ட் திட்டங்களில் எந்த நிறுவனம் சிறந்தது?

பிராட்பேண்ட் திட்டங்களில் எந்த நிறுவனம் சிறந்தது?

இந்தியாவில் உள்ள பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்ளுக்கு பல்வேறு சலுகைகளுடன் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்று பலருக்கும் குழப்பம் ஏற்படும். சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கும் தொலைத்தொடர்பு குறித்து இணையத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதனை தெரிந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு தேவையான பிராண்ட்பேண்ட் திட்டங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

அந்த வகையில் தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய சில முக்கிய நிறுவனங்களின் பிராட்பேண்ட் திட்ட விவரங்கள் குறித்து இங்கே காணலாம்.

ஜியோ நிறுவனம் வழங்கக்கூடிய பிராட்பேண்ட் திட்டமானது ஓடிடி சப்ஸ்க்ரிப்ஷனுடன் வருகிறது. இந்தியாவில் மிகவும் நம்பகமான சேவையாக கருதப்படும் ஜியோஃபைபர் ஆனது ரூ.999 விலையில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் 150 எம்பிபிஎஸ் அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் எஃப்யூபி லிமிட்டானது 3300ஜிபி அல்லது 3.3டிபி ஆகும். இந்த திட்டம் தான் அதிகளவில் விற்பனையாகும் திட்டம் என்று கூறப்படுகிறது. மேலும் இது அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் , ஈரோஸ் நவ் போன்ற 15 ஓடிடி இயங்குதளங்களுக்கான சப்ஸ்க்ரிப்ஷனை வழங்குகிறது.

அடுத்ததாக சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குவதில் ஏர்டெல் நிறுவனம் சிறந்து வழங்குகிறது. ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பு பல திட்டங்களை வழங்குகிறது, ஆனால் டெல்கோவின் 'என்டர்டெயின்மென்ட்' பேக் ரூ.999 விலையில் 200 எம்பிபிஎஸ் அதிவே டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் லிமிட்டானது 3.3டிபி அல்லது 3300ஜிபி ஆகும். ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களுடன் ' ஏர்டெல் தேங்க்ஸ் பெனிஃபிட்ஸ் ' அம்சத்தையும் வழங்குகிறது. மேலும் இது அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி இயங்குதளங்களுக்கான சப்ஸ்க்ரிப்ஷனை வழங்குகிறது.

இதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஆனது பாரத் ஃபைபர் இணைப்பு மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. இதில் பிரபலமான திட்டமாக கருதப்படுவது 100 எம்பிபிஎஸ் திட்டமாகும். இதன் சூப்பர்ஸ்டார் பிரீமியம்-1 பிராட்பேண்ட் திட்டம் ரூ.749 விலையில் 100 எம்பிபிஎஸ் அதிவேக டேட்டாவை வழங்குகிறது, இதில் டேட்டா லிமிட் 1000ஜிபி வரை கிடைக்கிறது. மேலும் இந்நிறுவனம் சோனி லிவ், ஜீ5 போன்ற சில ஓடிடி இயங்குதளங்களுக்கான சப்ஸ்க்ரிப்ஷனை வழங்குகிறது, அதுமட்டுமல்லாது 90% தள்ளுபடியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com