வாட்ஸ்அப்பின் அடுத்த அதிரடி அப்டேட் : யாருக்கும் தெரியாமல் குரூப்பில் இருந்து வெளியேறலாம் !!

Whatsapp
Whatsapp

புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டே இருக்கும் வாட்ஸ்அப், விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் அப்டேட் குறித்த தகவல் லீக்காகியுள்ளது. ஒரு யூசர் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறும்போது, ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் குழுவிலிருந்து வெளியேறிவிட்டார் என்று குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும். ஆனால், புதிய அப்டேட்டில் யாருக்கும் தெரியாமல் குரூப்பில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம்.

குரூப் அட்மின்களுக்கு மட்டுமே இந்த தகவல் தெரியப்படுத்தப்படும். இதற்கான பணிகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடங்கியுள்ளது.

விரைவில் வாட்ஸ் அப் புதிய அப்டேட்டை கொடுக்க உள்ளது. அதில் குரூப் அட்மின்கள் மட்டும், குரூப்பில் இருந்து யார் வெளியேறி இரு க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். மற்ற உறுப்பினர்களுக்கு யார் வெளியேறி இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு சாட்பாக்ஸில் காட்டாது என தெரிவித்துள்ளது.

ஒருவேளை யாரெல்லாம் குரூப்பில் இருக்கிறார்கள் என தெரிய வேண்டும் என்றால், குரூப் இன்ஃபோவுக்கு சென்று பார்த்தால் மட்டுமே மற்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள முடியும். அல்லது குரூப் அட்மின் குரூப் உறுப்பினர்களுக்கு சொல்ல வேண்டும். இது பிரைவசியாகவும் பார்க்கப்படுகிறது.

ஒரு குரூப்பில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் சத்தமில்லாமல் வெளியேறிக் கொள்ளலாம். வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டாவிற்காக உருவாக்கப்பட்ட அம்சமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் பீட்டாவிலும் வரும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com