உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்த செயலியில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாட்ஸ்ஆப்பில் வாட்ஸ்ஆப் பிசினஸ் என்ற செயலியும் தனியாக இருக்கிறது. வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த செயலி பல அம்சங்களை வழங்குகிறது. இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் தற்போது புதிய அம்சமும் இடம்பெறுகிறது.
இதன்படி வாட்ஸ்ஆப் ப்சினஸ் பயனர்கள் தங்களுடைய ஷார்ட் லிங்கை வாடிக்கையாளர்களின் செயலியில் பகிர முடியும். இதன்மூலம் ஒருவரது வணிகம் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம். இதற்கு முன் க்யூஆர் கோட் மட்டுமே ஷேர் செய்யும் வகையில் இருந்த நிலையில் அதற்கு பதில் ஷேர் ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒருவருடைய போன் நம்பர் இல்லாமலேயே அவரது பிஸ்னஸ் அக்கவுண்டை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீட்டா வெர்ஷன் 2.22.9.8 வாட்ஸ்ஆப்பில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.