எலான் மஸ்க்குக்கு பில்கேட்ஸ் மீது என்ன கோபம்?

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

மஸ்க் பில் கேட்ஸ் மீது கோபமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று இணையவாசிகள் ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு கருத்தாக தெரிவித்து வருகின்றனர். சிலர் இதுவாக இருக்கலாம் என்று யூகித்துள்ளனர்.

அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனம், டெஸ்லா பங்கு மதிப்பை அரை பில்லியன் மதிப்பிலானதாகக் குறைக்க முயற்சித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கவே மஸ்க் இப்படி செய்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர்.

அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனம், டெஸ்லா பங்கு மதிப்பை அரை பில்லியன் மதிப்பிலானதாகக் குறைக்க முயற்சித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கவே மஸ்க் இப்படி செய்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தான் டெக் டவுனில், தற்போது ஹாட் டிரெண்டாகி உள்ளது. அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை கேலி செய்வது போன்ற பதிவை வெளியிட்டுள்ளார்.

எலான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "in case u need to lose a boner fast" என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் ஒரு பக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸும், மற்றொரு புறம் ஆப்பிள் ஐஓஎஸ் எமோஜியில் உள்ள தொப்பையுடன் இருக்கும் ஆன் படத்தினையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

மஸ்கின் இந்த பதிவை அலசி ஆராய்ந்த ட்விட்டர் வாசிகள், சரியான காரணங்கள் புரியாமல் திணறி நின்றனர். எனினும் சிலர் இதுகுறித்த கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். வெளிப்படையாக, எலோன் மஸ்க்கின் ட்வீட், மைக்ரோசாப்ட் ஊழியருடன் பில் கேட்ஸ் நெருக்கமாக இருந்த விவகாரத்தில், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து பெற்றதை குறிப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com