யூ டியூப்பில் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா?

you tube
you tube

சுய தொழில் விருப்பம் உள்ளவர்கள் கூட யூ யூடியூபில் ஒரு சேனல் தொடங்கி, சம்பாதிக்கலாம். விளம்பர வருவாய் மூலம் உங்களுக்கான வருமானம் கிட்டும். ஒருவேளை நீங்கள் யூ டியூப் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்.

தரமான கன்டென்ட்

தரமான கன்டென்டுகளுக்கு யூ டியூப்பில் மிகுந்த வரவேற்பு உள்ளது. புதிதாக சேனல் ஆயிரம் பேர் தொடங்கலாம். ஆனால், தரமான கன்டென்டுகளை தினமும் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பார்வையாளர்களின் ஆதரவு இருக்கும். மற்றவர்களிடம் இருந்து உங்களை சேனலை வித்தியாசமாக காட்டவும், மக்களை ஈர்க்கும் வகையிலும் உங்கள் கன்டென்ட் இருக்க வேண்டும்.

விளம்பரப்படுத்துதல்

அஃபிலியேட் மார்க்கெட்டிங் எனப்படும் முறை என்பது ஒருவரின் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் ஒரு முறையாகும். பிரபலமான நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் இந்த வகையான மார்க்கெட்டிங் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். யூ டியூப் மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வழியாகவும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ஸ்பான்சர் வீடியோ

உங்கள் யூ டியூப் சேனல் பிரபலமாக இருந்தால், மற்ற யூடியூப் சேனல்களை உங்கள் சேனல் மூலம் பிரபலப்படுத்தலாம். அதற்காக அந்த சேனல்காரர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

பொருட்கள் விற்பனை

தரமான பொருட்களை உங்கள் யூடியூப் சேனல் மூலம் விற்பனை செய்யலாம். இது ஒருவகையான மார்க்கெட்டிங் என்றாலும், பொருள் உற்பத்தி செய்பவர்களுக்கு இந்த வகையான மார்க்கெட்டிங் தேவைப்படுகிறது. உற்பத்தியாளர்களை அணுகி குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு, அவர்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்யலாம். நீங்கள் வருமானம் ஈட்ட இதுவும் ஒரு வழி.

விளம்பரங்கள்

கூகுள் கொடுக்கும் விளம்பரம் இல்லாமல் நீங்கள் தனியாக சில விளம்பரங்களை ஒளிபரப்பிக் கொள்ள யூ டியூப் அனுமதிக்கும். குறிப்பிட்ட சப்ஸ்கிரைபர்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் யூ டியூப் விளம்பரத்தைக் கடந்து சில பிரபலமான நிறுவனங்களின் விளம்பரத்தை ஒளிபரப்பிக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com