வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா

வாடிக்கையாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்த வோடபோன் ஐடியா!!

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்நிறுவனம், அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் வழங்கப்படும் அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியை குறைத்துள்ளது.
Published on

முன்னதாக, ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வழங்கப்படும் அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியை மாற்றியது. டெலிகாம்டாக்-இன் செய்திகளின்படி, இப்போது வோடஃபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் அமேசன் ப்ரைம் சந்தாவிலும் அதே மாற்றங்களைக் காணலாம்.

வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்கள் 6 மாத அமேசான் பிரைம் சந்தாவைப் பெறுவார்கள். வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்கள் இனி அமேசான் பிரைம் சந்தாவை 1 வருட செல்லுபடியுடன் பெற மாட்டார்கள்.

மாறாக, இப்போது ஆறு மாதங்களுக்குப் பெறுவார்கள். இந்த மாற்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தொலைத்தொடர்பு இணையதளம் கூறுகிறது.

போஸ்ட்பெய்டு திட்டங்களால் வழங்கப்படும் மற்ற கூடுதல் நன்மைகளின் செல்லுபடியாகும் காலத்தில் நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்கள், குடும்பத் திட்டங்கள், ரெட்எக்ஸ் திட்டங்கள் என அனைத்திலும் அமேசான் ப்ரைம் சந்தாவின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

logo
vnews27
www.vnews27.com