வோடாஃபோன் - ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ஜியோ இதுபோன்ற மலிவு விலை டேட்டா பிளான்களை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.
ஐபிஎல் நடைபெற்று கொண்டிருக்கும்போது, இத்தகைய மலிவு விலையில் கிடைக்கும் டேட்டா திட்டங்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
ரூ.75க்கு கிடைக்கும் சலுகைகள் ஜியோ நிறுவனத்தின் 75 ரூபாய் திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டி கொண்டது
இந்த திட்டத்தில், நாள் ஒன்றுக்கு 100எம்பி டேட்டா மற்றும் 200எம்பி கூடுதல் டேட்டா கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 2.5 ஜிபி இணையம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்குகளுக்கும் 50 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அம்சம் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா சப்ஸ்கிரிப்சனும் கிடைக்கும்.
ஜியோவின் 91 ரூபாய் திட்டத்தில் நீங்கள் தினமும் 100எம்பி இணையம் மற்றும் 200எம்பி கூடுதல் டேட்டாவைப் பெறுவீர்கள். 28 நாட்கள் வேலிடிட்டி. இந்த திட்டத்தில், உங்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் அனைத்து நெட்வொர்குகளுக்கும் 50 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளின் சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.