மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் : வி நிறுவனம் வழங்கும் சலுகை அறிவிப்பு !!

வி நிறுவனம் புதிதாக பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.
மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் : வி  நிறுவனம் வழங்கும் சலுகை அறிவிப்பு !!

வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் டேட்டா ஆட் ஆன் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 151 ஆகும். இதில் மொத்தம் 8GB வரையிலான டேட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

முன்னதாக ரூ. 82 விலையில் வி அறிவித்த பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் சோனி லிவ் மொபைல் சந்தா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெலிகாம் சந்தையில் வி நிறுவனத்துக்கு போட்டியாளரான ஏர்டெல் சமீபத்தில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்து இருந்தது. இவற்றின் விலை ரூ. 399 மற்றும் ரூ. 899 ஆகும். இவை முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன.

வி அதிகாரப்பூர்வ வலைதள விவரங்களின் படி புதிய ரூ. 151 பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் மொத்தம் 8GB டேட்டா, மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com