இந்தியாவில் அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் அதிகரித்து உள்ளது எனவும் அப்படியானால் அதனை தடுப்பதற்காக ஊழியர்களுக்கு சிறப்பு சைபர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார் இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் இணைய பாதுகாப்பு அனைத்து அனைத்து பயனாளிகளுக்கும் பாதுகாப்பான வழியில் கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2021ம் ஆண்டில் 14,02,809 சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக CERT தெரிவித்து உள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதேபோல் 2022ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை 2,12,485 சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த காணொளி வீடியோக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மத்திய அரசு மூலம் நடத்தப்பட்டு வருவதாகவும், சைபர் குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.