ரெட் வார்னிங் : பயனர்களின் பாதுகாப்புக்காக கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம் !!

ரெட் வார்னிங் : பயனர்களின் பாதுகாப்புக்காக கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம் !!

டெக்னாலஜியின் வளர்ச்சியால் நாளுக்கு நாள் ஆபத்துகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. இதனால் டிவிட்டர், கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் யூசர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் டெக் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் அதே சமயத்தில் தங்களால் இயன்றளவுக்கு புதிய புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கூகுள் இந்த விஷயத்தில் பெரும் அக்கறை கொண்டுள்ளது. நாள்தோறும் புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

கூகுள் சாட் பாக்ஸில் தோன்றும் அல்லது ஊடுருவும் தவறான தகவல்களைக் கொண்ட லிங்குகள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் ரெட் வார்னிங் நோடிபிகேஷன் அலார்ட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை எச்சரிக்கை மெசேஜ் இருக்கும்போது உங்களுக்கு ஆப்சனும் இருக்கும். நீங்கள் அந்த லிங்குகள் தவறானவை அல்ல என உணர்ந்தால் Allow அம்சத்தையும், இல்லையென்றால் தடுக்கிற ஆப்சனையும் யூசர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த அம்சம் பெரிய அளவிலான சைபர் தாக்குதல்களில் இருந்து யூசர்களை பாதுகாக்கும். கூகுள் சாட் யூசர்கள் இதன் மூலம் ஹேக்கிங் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com