போன் நம்பர் மற்றும் ரெக்கவரி ஜிமெயில் ஐடி இல்லாமல் ஜிமெயிலை மீட்கலாம் !!

போன் நம்பர் மற்றும் ரெக்கவரி ஜிமெயில் ஐடி இல்லாமல்  ஜிமெயிலை மீட்கலாம் !!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தால், அனைத்துக்கும் ஆன்லைனை மட்டுமே எல்லோரும் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வெவ்வேறு வேலைகளுக்கு ஜிமெயில் உள்ளிட்டவற்றில் தனி கணக்குகளை உருவாக்க வேண்டும். அப்படி தொடங்கும்போது சில பிரச்சனைகளையும் நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது.

பல நேரங்களில் நாம் பாஸ்வேர்டுகளை மறந்துவிடுவோம். இதற்காக கணக்குகள் உருவாக்கும்போது, மீட்பு ஜிமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொடுக்க வேண்டும்.அப்படி கொடுத்திருந்தீர்கள் என்றால், பாஸ்வேர்டு மறந்துபோன ஜிமெயில் ஐடிகளை எளிமையாக மீட்டெடுக்க வேண்டும்.

இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலிலும் நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கண்டுபிடிக்க, மீட்டெடுக்க ஒரு டிரிக்ஸ் ஒன்று உள்ளது. முதலில் ஜிமெயில் லாகின் பக்கத்திற்கு செல்லவும். இங்கே Forget Password என்பதில் கிளிக் செய்யவும். அப்போது, முன்பு பதிவு செய்திருந்த பாஸ்வேர்டை பதிவிடுமாறு கேட்கப்படுவீர்கள்.

முந்தைய பாஸ்வேர்டு உங்களுக்கு நினைவிருந்தால், அதை உள்ளிடவும். அது நினைவில் இல்லை என்றால், Try Another Way -வைதேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, I do not have my phone number என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில், சில கேள்விகளுக்கு பதிலளிக்க நேரிடும். அந்த தகவலை சரியாக கொடுத்தீர்கள் என்றால், அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்வீர்கள். அனைத்து கேள்விகளுக்குத் சரியாக நீங்கள் பதில் கொடுக்கும்போது ஜிமெயிலை மீட்டெடுக்க முடியும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com