ஏர் டெல் அறிவித்த பிரீ பெய்ட் சலுகைகள் !!

ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஏர் டெல் அறிவித்த பிரீ பெய்ட் சலுகைகள் !!

இரண்டு புது சலுகைகளுடன் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கொண்ட சலுகைகளை வழங்கி வருகிறது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொண்ட பலன்களை அறிவித்த நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் இதே போன்ற சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ நிறுவனம் அறிவித்த சலுகைகள் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் டேட்டா மட்டும் வழங்குகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளின் விவரங்கள் :

ஏர்டெல் ரூ. 399 - தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டி

ஏர்டெல் ரூ. 839 - தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 84 நாட்கள் வேலிடிட்டி

இரண்டு ஏர்டெல் சலுகை விவரங்களும் ஏர்டெல் வலைதளம், ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் அனைத்து செக்பாயிண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com