காஸ்மோஸ் புரோ மாடலானது இரண்டாம் தலைமுறை அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது. ஒரு தொடலில் குரல் வழி கட்டுப்பாடு செயல்பாடும், உள்ளீடான நினைவக வசதியும் கொண்டது.
வயர்லெஸ் இயர்போன் இணைப்பு வசதியை ஏற்படுத்தக் கூடியது. மேலும் உடல் நிலையை ஆராய்வதற்கு கண்ணாடியிழை சென்சார்கள் உள்ளன.
கருப்பு, தங்க நிறம், நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளன. இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை செயல்படும்
பெபிள் புரோ மாடல் விலை சுமார் ரூ.3,499. அனைத்து விதமான தட்ப வெப்ப நிலையையும் தாங்கி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது பெபிள் லீப். நீர் புகா தன்மை கொண்டது.
மிகவும் மென்மையான சிலிக்கான் ஸ்டிராப் உள்ளது. இதன் திரை 1.3 அங்குலம் கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட வற்றை துல்லியமாக அளவிடும். உள்ளீடாக மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.
அடர் பச்சை நிறம், கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்கும். வெயில் காலங்களில் உடலில் நீர் சத்து குறைவதை எச்சரிக்கும் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3,999.