OnePlus Nord 2T : ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன் !!

OnePlus Nord 2T : ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன் !!

ஒன்பிளஸ் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பிரீமியம் பிராண்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நார்ட் 2டி குறித்து சில நாட்களாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக யூடியூப்பில் ஒரு வீடியோவில் காணப்பட்டது.

இந்த சமீபத்திய OnePlus ஸ்மார்ட்போனின் அன்பாக்ஸிங் வீடியோவின் படி, இந்த போனில் MediaTek Dimensity 1300 SoC சிப்செட் செயலி கொடுக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் AnTuTu பெஞ்ச்மார்க்கில் 622,964 புள்ளிகளையும், Geekbench-ல் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் டெஸ்டில் 719 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 2760 புள்ளிகளையும் பெற முடியும் என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com