நோக்கியாவின் 1 ஸ்மார்ட்போன், 2 ஃபீச்சர் போன்கள் அறிமுகம் !!

நோக்கியாவின் 1 ஸ்மார்ட்போன், 2 ஃபீச்சர் போன்கள் அறிமுகம் !!

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது சாதனங்களை அறிமுகம் செய்தது. இதில் நோக்கியா G21 ஸ்மார்ட்போன், நோக்கியா 105 மற்றும் நோக்கியா 105 பிளஸ் ஃபீச்சர் போன் மாடல்கள் உள்ளிட்டவை அடங்கும். இவற்றுடன் நோக்கியா கம்ஃபர்ட் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா கோ இயர்பட்ஸ் பிளஸ் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய நோக்கியா 105 மாடல் 2019 இல் அறிமுகமான நோக்கியா 105 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இரு மாடல்களும் காம்பேக்ட் கிளாசிக் நார்டிக் டிசைன் மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் எக்ஸ்டீரியர் ஃபினிஷ் கொண்டுருக்கின்றன. இரு மாடல்களிலும் எப்.எம். ரேடியோ, அதிகபட்சம் எல்.இ.டி. டார்ச்லைட் மற்றும் பில்ட் இன் கிளாசிக் கேம்ஸ்-ஐ கொண்டிருக்கிறது.

நோக்கியா G21 அம்சங்கள்:

- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 V-நாட்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

- 1.6GHz ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்

- மாலி G57 MP1 GPU

- 4GB LPDDR4x ரேம், 64GB மெமரி

- 6GB LPDDR4x ரேம், 128GB மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆண்ட்ராய்டு 11

- 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்

- 2MP டெப்த் கேமரா

- 2MP மேக்ரோ கேமரா, f/2.4

- 8MP செல்ஃபி கேமரா

- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ

- பக்கவாட்டில் கைரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

- யு.எஸ்.பி. டைப் சி

- 5050mAh பேட்டரி

- 18W சார்ஜிங்

புதிய நோக்கியா G21 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6GB + 128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நோக்கியா 105 (2022) மாடல் சார்கோல் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 105 பிளஸ் மாடல் சார்கோல் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com