அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஜியோ : இலவச வாய்ஸ் கால் + டேட்டாவுடன் போன் ?

ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு புதிய ஜியோபோன் 2021 சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் வழியாக ஒரு புதிய ஜியோபோனையும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு வரம்பற்ற சேவைகளையும் ஒருவர் பெறலாம்.
அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஜியோ : இலவச வாய்ஸ் கால் + டேட்டாவுடன் போன் ?

ரிலையன்ஸ் ஜியோ தனது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் ஜியோவின் 4ஜி போனை பயனர்களுக்கு வழங்குகிறது. இவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டாவுடன் வரும் நிறுவனத்தின் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஜியோபோனுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு வருட வேலிடிட்டி பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டங்களை நீங்கள் வாங்கினால், ஜியோபோன் இலவசமாக கிடைக்கும். திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.1,999 திட்டத்தைப் பொறுத்தவரை இது இரண்டு வருட வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் நிறுவனத்தின் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் 48 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியும் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்த திட்டத்துடன் பயனர்கள் ஜியோ ஆப்ஸிற்கான இலவச அணுகலையும் பெறுவார்கள்.

ஜியோவின் ரூ.1,499 திட்டம் ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டம் நிறுவனத்தின் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்த திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு ஜியோபோன் இலவசமாக கிடைக்கும். இந்தத் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் 24 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com