ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல்களில் ஓபன் செய்யும் புதிய அப்டேட்! வாட்ஸ் அப் விரைவில் வெளியிடுகிறது !!

Whatsapp
Whatsapp

உங்களின் வாட்ஸ்அப் கணக்கு முதன்மை ஸ்மார்ட்போனில் இல்லாவிட்டாலும், மற்ற போன்களில் ஓபன் செய்து கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அண்மையில் வெளியிடத் தொடங்கியது. இதன்படி, ஒரு யூசர் தங்களின் வாட்ஸ் அப் கணக்கை நான்கு ஸ்மார்ட்போன்கள் வரை ஓபன் செய்து வைத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து இந்த அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

கூகிள் பிளே பீட்டா திட்டத்தின் மூலம் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு வாட்ஸ்அப் புதிய பீட்டா அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள அப்டேட்டானது, பல சாதன அம்சத்தின் இரண்டாவது பதிப்பைப் பற்றிய குறிப்புகளைப் பெறும். இந்த தகவல் உங்கள் கணக்குடன் இரண்டாம் நிலை ஸ்மார்ட்போனை இணைக்க அனுமதிக்கும். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் ஒன்றை WABetaInfo வெளியிட்டுள்ளது.

அதில், புதிய அம்சம் வெளிவந்தவுடன், புதிய “சாதனத்தை துணையாகப் பதிவுசெய்க” என்ற பகுதியைக் காண முடியும். இரண்டாம் நிலை மொபைல் சாதனத்தில் வாட்ஸ்அப்பைத் திறக்க முயலும்போது அந்தப் பிரிவு காண்பிக்கப்படும் என்று லீக்கான தகவல் தெரிவிக்கிறது

இணைப்பை அங்கீகரிப்பதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்ய, உங்கள் பிரதான சாதனத்தை இரண்டாம் நிலை சாதனத்தின் திரையில் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, தற்போது நீங்கள் சாட்பாக்ஸில் உள்ள ஃபோன் எண்ணைத் தட்டினால், WhatsApp உங்களை நேரடியாக உங்கள் இயல்புநிலை டயலர் பயன்பாட்டிற்கு அழைத்துச் செல்லும். வரவிருக்கும் அப்டேட்கள் மூலம், ஃபோன் எண்ணைத் தட்டிய பிறகு இயங்குதளம் உங்களுக்கு கூடுதல் விருப்பங்களையும் காட்டும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com