வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அப்டேட் !!

Whasappt
Whasappt

வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர இருக்கும் அப்டேட்டுகளை முன்கூட்டியே லீக் செய்யும் டெக் டிராக்கரான WABetaInfo தளம், வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் டிஸ்அப்பியரிங் மெசேஜூகளை சேமித்து வைக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, அனுப்பப்படும் மெசேஜூகள் பார்த்தவுடன் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் தானாக அழியும் வகையிலான அம்சம் வாட்ஸ்அப்பில் நடைமுறையில் உள்ளது.

இது தனிநபர்களின் சாட் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருந்தது. தற்போது இந்த அம்சத்துக்கு நேரெதிரான அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம். அதாவது டிஸ்அப்பியரிங் எனப்படும் மறைந்துபோகும் செய்திகளை யூசர்கள் விரும்பினால் சேமித்து வைத்துக் கொள்ளும் புதிய செட்டிங்ஸை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது

. மறைந்துபோகாமல் இருக்கச் செய்ய முடியும். ஆன்டிராய்டு பீட்டாவில் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஆப்பிள் யூசர்கள் பயன்படுத்தும், WhatsApp iOS பீட்டாவிலும் சோதனையைத் தொடங்கியுள்ளது.

அந்த புதிய ஆப்சனில் செய்தியை வைக்க விரும்பும் அம்சம் இருக்கும். அதனை ஆன் செய்திருந்தால் மட்டுமே மறைந்துபோகும் செய்தி, அவ்வாறு டிஸ்அப்பியர் ஆகாமல் தடுக்க முடியும். தனிநபர்களின் சாட்களுக்கு பாதுகாப்பு உத்திரவாதத்தை வழங்கிய டிஸ்அப்பியரிங் ஆப்சனுக்கு நேர் எதிராக கொண்டு வரப்படும் புதிய ஆப்சன், சர்ச்சைக்குரியதாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com