ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன்கள் !!

OnePlus நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. ஒன்பிளஸ் 10R,ஒன்பிளஸ் நோர்டு CE 2 லைட் உள்ளிட்ட அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன்கள் !!

ஒன்பிளஸ் நோர்டு சிஇ லைட் 5 ஜி ஸ்மார்ட்போன், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வர இருக்கிறது. அரை மணி நேரத்தில் 30 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நோர்டு சிஇ 2 Lite ஸ்மார்ட்போனில் 64MP டிரிபிள் கேமரா இருக்கும்.

மேலும், ஏப்ரல் 28 ஆம் தேதி Nord Buds உடன் வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) அறிமுகமும் இருக்கும் என தெரிவித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் நோர்டு சிஇ 2 Lite 5G ஸ்மார்ட்போன் 33W சார்ஜருடன் 5000mAh பேட்டரியைப் பெற்றிருக்கும் எனக் கூறியுள்ளது.

குவால்காம் ஸ்நாப்டிராகன் 695 சிப்செட்டில் வரும் நோர்டு சிஇ 2 லைட் 8GB ரேம் இருக்கும். ஆன்டிராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும்.

தெளிவான ஒலிக்கான 12.4mm பெரிய டைனமிக் பாஸ் டிரைவர்கள் இதில் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஒன்பிளஸ், ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை இயக்க முடியும் எனக் கூறியுள்ளது.

ஒன்பிளஸ் 10R 5G மற்றும் நோர்டு சிஇ 2 Lite 5G ஸ்மார்ட்போன்கள் இயர்பட்ஸுடன் வெளிவர இருக்கின்றன. பிரீமியம் மற்றும் மிட் செக்மென்ட்டை குறிவைத்து களமிறங்கும் இந்த ஸ்மார்ட்போன் 10 ப்ரோவின் பதிப்பை போன்று இருக்கும்.

ஒன்பிளஸ் 10R மொபைல் போன் MediaTek Dimensity 900 மேக்ஸ் சிப்செட்டுடன் 150W பாஸ்ட் சார்ஜருடன் வரும். 4500mAh பேட்டரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், புதிய சார்ஜிங் தொழில்நுட்பதில் வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com