Apple 14 Series மொபைலில் அறிவிக்கப்படவிருக்கும் புதிய அம்சங்கள் !!

Apple 14 Series மொபைலில் அறிவிக்கப்படவிருக்கும் புதிய அம்சங்கள் !!

சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 14 சிரீஸ் மாடல் பல மாறுபாட்டைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு புதிய சாதனத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, ஐபோன் 14 மேக்ஸ் மாடலானது 90Hz OLED டிஸ்ப்ளேவுடன் வர உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இதன் சிப்செட்டுடன் 6GB ரேம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஐபோன் 14 சிரீஸின் முந்தைய இரண்டு மாடல்களை போலவே இவையும் இருக்கும். ஆனால் ஆப்பிள் மினி மாடலை தவிர்த்து, மேக்ஸ் மாடலை வாங்கினால் பல வசதிகளும் சிறப்பம்சங்களும் கிடைக்கும். இதன் காரணமாக, வெண்ணிலா ஐபோன் 14 சந்தையில் அடிப்படை மாறுபாட்டை பெற்றுள்ளது.

ஐபோன் 14 மேக்ஸ் மாடலானது ஐபோன் 13 சீரிஸின் அதே ஹார்டுவேர் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதையும் இதன் மூலம் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனால் 6ஜிபி ரேம் மேம்படுத்தல் மற்றும் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆகிய புதிய அம்சங்கள் வாங்குபவர்களை ஈர்க்க கூடும்.

ஐபோன் 14 மேக்ஸ் மாடலில் டூயல் 12 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் 14 மேக்ஸ் மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரு வேறு வசதிகளும் தரப்பட உள்ளன. அதே நேரத்தில் ஐபோன் 14 ப்ரோ சீரிஸில் 2 டிபி வரை உயர்த்தப்படலாம்.

இதுகுறித்து அடுத்த மாதம் நடைபெறும் விர்ஷுவல் மீட்டிங்கில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உட்பட பல அம்சங்களை பெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com