1,250 கோடி செலவில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்த கோடீஸ்வரர்கள் !!

1,250 கோடி செலவில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்த கோடீஸ்வரர்கள் !!

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா தலைமையிலான மூன்று பேர் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில் வணிக ரீதியிலான பயணம் சென்றிருக்கின்றனர்.

இஸ்ரேல் தொழிலதிபர் எய்டன் ஸ்டிப்பே , அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கன்னோர் , கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர் மார்க் பதி ஆகியோர் பறந்திருக்கின்றனர்.

10 நாள் பயணத்தில், இவர்கள் மூவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். இதற்காக ஒருவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 418 கோடி செலவாகும்.

மூன்று பணக்காரர்களுடன் முன்னாள் விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் இருக்கும் எண்டவர் என்ற குமிழ், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இன்று இணைகிறது. பயணத்தை வழிநடத்தும் மைக்கேல் லோபஸ் அலெக்ரியா, நாசாவில் பணிபுரிந்த காலத்தில் 1995 முதல் 2007ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 விண்வெளிப் பயணங்களை மேற்கொண்ட அனுபவமிக்கவர். நால்வரும் ஆக்சியம்-1 பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதுவரை, 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் ஆய்வுகளை நடத்திவிட்டு திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com