ஸ்மார்ட் வாட்ச் விலை இவ்ளோதானா ? போட் நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்

ஸ்மார்ட் வாட்ச் விலை இவ்ளோதானா ? போட் நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்

போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போட் நியோ வேவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ. 1,799 விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் ப்ரோ மற்றும் போட் வேவ் லைட் மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் போட் அறிமுகம் செய்து இருக்கும் மூன்றாவது வேவ் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும்.

போட் வேவ் நியோ மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் ஃபிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது. போட் வேவ் நியோ மாடலில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் அம்சங்கள், ஒரு வார பேட்டரி லைஃப், ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

போட் வேவ் நியோ அம்சங்கள் : - 1.69 இன்ச் 454x454 பிக்சல் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, - 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் டிராக்கர், அக்செல்லோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 சான்று, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், புதிய போட் வேவ் நியோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com