பழைய 4ஜி ஸ்மார்ட் போன் இருக்கிறதா? ஜியோவின் சூப்பர் ஆஃபர் !!

பழைய 4ஜி ஸ்மார்ட் போன் இருக்கிறதா? ஜியோவின் சூப்பர் ஆஃபர் !!

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ நிறுவனத்தை தொடங்கிய பிறகு டெலிகாம் துறையில் அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான ஆஃபர்களையும் இலவசங்களையும் அள்ளி வழங்கும் ஜியோ, ஸ்மார்ட்போன் சந்தையிலும் கால்பதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்தாலும், லேட்டஸ்டாக ஸ்மார்ட்போன் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போனுக்கு இப்போது அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக சந்தையில் 6, 499 ரூபாய்க்கு விற்பனையாகும் இந்த போன் தற்போது 2000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தள்ளுபடியை நீங்கள் பெற வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரேஒரு விஷயம் தான். உங்களிடம் இருக்கும் 4 ஜி ஸ்மார்ட்போன் வொர்க் ஆகும் நிலையில் இருந்தால், அதனை கொடுத்துவிட்டு இந்த போனின் ஆஃபரை பெற்றுக் கொள்ளுங்கள்.

இதன்மூலம் 2000 ரூபாய் குறைந்து 6,499 ரூபாய்க்கு இந்த போனை நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். ஒரே தவணையில் உங்களால் வாங்க முடியாது என நினைக்கிறீர்களா? அதற்கும் ஒரு ஆப்சன் வைத்திருக்கிறது ஜியோ. இஎம்ஐ மூலம் இந்த போனின் தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.

முன்பணமாக 1,999 ரூபாய் மட்டும் செலுத்தி, எஞ்சிய தொகையை இஎம்ஐ-க்கு மாற்றிக் கொள்ளலாம்.அதிகபட்சமாக 24 மாதங்கள் இந்த இஎம்ஐ சலுகை வழங்கப்படுகிறது. ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் உள்ளன.

அன்லிமிடெட் அழைப்பு, பிரத்யேக டேட்டா யூசேஜ் கிடைக்கும். ஜியோவின் ஆல்வேஸ்-ஆன்-பிளான்கள் 24 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள் EMI விருப்பங்களில் முறையே ரூ.300 மற்றும் ரூ.350-க்கு கொடுக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com