ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை பராமரிப்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். ஏரளாமான செயலிகள், ஹை ரெசொலூஷன் போட்டோஸ், வீடியோஸ், பைல்ஸ் என ஸ்டோரேஜ் வெகு சீக்கிரமாக நிறைந்து, ஸ்டோரேஜ் புல் என்கிற நோட்டிபிகேஷன் தோன்றும். ஸ்மார்ட்போனில் சில டிப்ஸ் மூலம் ஸ்டோரேஜ் சிக்கலை தடுத்திட முடியும்.
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் இருக்கும் செயலிகளை நீக்குங்கள்.
ஸ்மார்ட்போனில் cache-க்கள் அதிகப்படியான ஸ்டோரேஜ் ஸ்பேஸை பிடித்திருக்கும். ஒவ்வொரு செயலியும், குறிப்பிட்ட டேட்டாவை தற்காலிகமாக ஸ்டோர் செய்து வைத்திருக்கும்.
அதனை டெலிட் செய்திட, முதலில் Settings செல்ல வேண்டும். அதில், Find the apps ஆப்ஷன் கிளிக் செய்யுங்கள். திரையில் தோன்றும் செயலி பெயர்களை கிளிக் செய்தால், அது மொபைலில் எவ்வளவு இடத்தை பிடித்துவைத்திருக்கிறது என்பதை காண்பிக்கும் அதிலே, இறுதியாக Clear the cache என்கிற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து டெலிட் செய்துவிடுங்கள்.
நீங்கள் ஆண்ட்ராய்டு யூசர் என்றால் கூகுள் கிளவுடு ஆப்ஷனும், ஐபோன் யூசர்களுக்கு ஆப்பிள் கிளவுடு வசதிகள் இருக்கும். மொபைலில் உள்ள போட்டோ, வீடியோ, பைல்களை கிளவுடில் மாற்றிக்கொள்ளாம். இது, செல்போனின் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் குறைத்திட உதவியாக இருக்கும்.
குறிப்பு கிளவுட் கணக்கின் லாகின் தகவல்களை மறந்துவிடாதிர்கள். ஏனெனில், மொபைல் மாற்றும் போது, லாகின் தகவல் தெரியாவிட்டால் டேட்டா இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.
ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு, வாட்ஸ்அப் முக்கிய காரணமாகும். இந்த பிரச்னை தீர்த்திட, வாட்ஸ்அப் செயலி ஓபன் செய்து Settingsஇல் storage and data ஆப்ஷனில் Manage storage கிளிக் செய்ய வேண்டும். அதில் தேவையில்லாத பைல்களை டெலிட் செய்துகொள்ளுங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக, மொபைலில் மெமிரி கார்டு போட்டிருந்தால், ஸ்டோரேஜ் பிரச்சினையை எளிதாக தீர்த்துவிடலாம்.