இணைய ஆபத்தில் அதிக அளவு சிக்கும் இந்திய குழந்தைகள் !!

இணைய ஆபத்தில் அதிக அளவு சிக்கும் இந்திய குழந்தைகள் !!

‘Life behind the screens of parents, tweens, and teens’ என்ற தலைப்பில் McAfee Corp என்ற ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனம் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியக் குழந்தைகள் அதிக ஆன்லைன் ஆபத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில், 10 முதல் 14 வயதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை 83 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச சராசரியான 76 சதவீதத்தை விட 7 சதவீதம் அதிகமாகும்.

இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவதால், அவர்கள் ஆன்லைன் அபாயங்களுக்கு சிக்குவதற்கு வழிவகுப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆபத்தில் அக்கறை கொள்ளும் பெற்றோர், ஆன்லைன் ஆபத்து குறித்து பொதுவாக கவலைப்படுவதில்லை அல்லது கவனம் செலுத்துவதில்லை.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இருக்கும் ஆன்லைன் ஆபத்து குறித்து கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் என இந்த ஆய்வு முடிவுகள் அறிவுறுத்துகின்றன. தனிநபர் தகவல் மற்றும் நிதிசார்ந்த தகவல் திருட்டு இதில் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

ஆன்லைன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு குழந்தைகள் வெளியில் இருப்பவர்களை அதிகம் நம்புவதில்லை. பெற்றோரை மட்டும் உதவிக்காக அவர்கள் அழைப்பதாக ஆய்வு கூறுகிறது. பிரச்சனை ஏற்பட்ட பிறகு அதற்கான தீர்வுகளை வழங்குவதில் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் பாலின அடிப்படையிலும் பெற்றோர்கள் ஆன்லைன் பாதுகாப்பு விஷயத்தில் வித்தியாசமான அணுகு முறையை கடைபிடிப்பதாக தெரிவிக்கும் ஆய்வு, டெக்னாலஜி ஆபத்தில் இனி வரும் காலங்களில் கடவுச் சொல், புகைப்படங்கள், தகவல் பரிமாற்றம் குறித்து குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com