முதல் 5ஜி ஆய்வுக் களத்தை துவக்கியது இந்தியா !!

முதல் 5ஜி ஆய்வுக் களத்தை துவக்கியது இந்தியா !!

மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 75-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் அங்கமாக நேற்று இந்தியாவின் முதல் தனித்துவம் மிக்க 5ஜி சோதனை களத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.டெலிகாம் துறையின் மிக முக்கிய மற்றும் அதிநவீன தொழில்நுட்ப பிரிவில் தற்தார்பு கொள்கையை அடைவதில் இது மிக முக்கிய பங்கு என அவர் தெரிவித்தார்.

நாட்டின் தனித்துவம் மிக்க 5ஜி சோதனை களம் ஐஐடி மெட்ராஸ் தலைமையில், ஐஐடி டெல்லி, ஐஐடி ஐதராபாக், ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூரு, அப்லைடு மைக்ரோவேவ் எலெக்டிரானிக்ஸ் என்ஜினியரிங் மற்றும் ஆய்வு கூட்டமைப்பு (SAMEER) மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான திறனாய்வு மையம் (CEWiT) என எட்டு நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

5ஜி சோதனை களமானது நாட்டின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கிறது. இது ரூ. 220 கோடி மதிப்பீட்டில் செய்ல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பத்தில் முதல் அழைப்பு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து இருக்கும் நெட்வொர்க் உபகரணங்களை மத்திய தொலைத் தொடர்பு துறை ஜூலை மாத வாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆய்வு செய்ய இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை வெளியீட்டில் மேலும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com