2021ம் ஆண்டு மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 162 % உயர்வு

கடந்த 2020ம் ஆண்டை ஒப்பிடும் பொழுது 2021ம் ஆண்டு மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 162 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
2021ம் ஆண்டு மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 162 % உயர்வு

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கியுள்ள பதிலில் கடந்த 2019ம் ஆண்டு நாட்டில் பதிவான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 1,64,852 ஆக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு 1,23,528 ஆக அதாவது சுமார் 25 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால் 2021ம் ஆண்டு 3,24,840 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இது முந்தைய ஆண்டைவிட 162.97 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவும் வெறும் 0.98% மட்டும்தான் கடந்த 2020ம் ஆண்டை ஒப்பிடும்பொழுது குறைந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை மின்சார வாகனங்களின் பதிவு என்பது 2019-20 ஆண்டைவிட 2020-21 ஆண்டில் 427.24% அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது 2020ம் ஆண்டு 5974 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டு 30037 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com