'ஹேக்' செய்யப்பட்ட உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை மீட்பது எப்படி?

இணைய உலகில் ஹேக்கிங் என்பது இப்போது அதிகரித்துவிட்டது. ஹேக்கிங் மூலம் ஆதாயம் தேடும் கும்பல் தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்றால் யாருடைய அக்கவுண்டையும் ஹேக் செய்துவிடுவார்கள்
'ஹேக்' செய்யப்பட்ட உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை மீட்பது எப்படி?

ஹேக்கிங் மூலம் உங்களின் தனிநபர் தகவல்களை அவர்கள் வசம் கொண்டு செல்ல முடியும். உங்களுடைய அக்கவுண்டை ஹேக் செய்து உங்களின் நண்பர்களின் தகவல்களையும்கூட திருடிக் கொள்வார்கள். இது உங்களை மட்டுமல்ல, நட்பு வட்டத்தில் இருப்பவர்களையும் பாதுகாக்க உதவும்.

அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என நீங்கள் கருதினால், உடனே பயப்பட வேண்டாம். முதலில் உடனடியாக . அதனை எப்படி செய்வது என நீங்கள் யோசித்தால், அக்கவுண்டில் பிரைவசி மற்றும் செட்டிங்ஸ் ஆப்சனுக்கு செல்லுங்கள்.

அங்கு இருக்கும் பாஸ்வேர்டு மற்றும் செக்யூரிட்டி என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அதில் பாஸ்வேர்டு சேஞ்ச் ஆப்ஷனை தேர்நெடுத்து, புதிய பாஸ்வேர்டை உருவாக்குங்கள்.

இப்போது உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டின் பாஸ்வேர்டு மாற்றப்பட்டிருக்கும். இதனைத் தொடர்ந்து அதே பக்கத்தில் உங்கள் அக்கவுண்ட் லாகின் செய்த டிவைஸ்களின் லிஸ்டும் இருக்கும். இதில் Where You're Logged in என்பதை கிளிக் செய்யவும்.

அதில் உங்களுக்குச் சொந்தமில்லாத டிவைஸ் அல்லது நீங்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தாத கம்ப்யூட்டரை கண்டறிந்தால், உடனடியாக உங்கள் அக்கவுண்ட்-ஐ டி ஆக்டிவேட் செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்து பேஸ்புக் ஹெல்ப் பக்கத்தில் சென்று புகார் அளியுங்கள்.

அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, ஹேக்கர் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் உங்களை நுழைய விடாதபடி லாக் செய்திருந்தால் Facebook.com/hacked-பக்கத்துக்கு செல்லவும்.

இதற்கு உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் உடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணை உள்ளிடும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் பதிவிடும் தொலைபேசி எண் சரியாக இருந்தால், உங்கள் அக்கவுண்டை மீட்டெடுக்கலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com