இந்தியாவில் பெரும்பாலானோர் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்தியாவில் பணமதிப்பிழப்பு ஏற்பட்ட பிறகு தான், பணமதிப்பிழப்பின்போது பலரும் டிஜிட்டல் பரிவர்தனைகளையே நாடினர். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருட காலமாக இருந்துவரும் தொற்றுநோய் பரவலாலும் இந்த செயல்முறை அதிக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இருப்பினும் இந்த முறையை ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது சற்று அதிருப்தியை அளித்து வந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
இனிமேல் சாதாரண பட்டன் போன்களை வைத்திருப்பவர்கள் கூட இதற்கு யுபிஐ பேமெண்ட் செய்யலாம். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ஒரு யுபிஐ கட்டண அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்தியாவின் கடைக்கோடியில் சாதாரண போன்களை வைத்திருப்பவர்கள் கூட எளிமையாக யுபிஐ பேமெண்ட் செய்யலாம். 'UPI 123PAY' என்னும் உடனடி கட்டண முறையில், சாதாரண மொபைல் பயன்படுத்துபவர்கள், யுபிஐ எனப்படும் யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டெர்பேஸ் சேவை மூலம் இனி பாதுகாப்பான முறையில் கட்டணங்களை செலுத்தலாம். சாதாரண மொபைல்களை பயன்படுத்துபவர்கள் UPI 123PAY மூலம், நான்கு தொழில்நுட்ப மாற்றங்களின் அடிப்படையில் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
4 விதமான மாற்று தொழில்நுட்பங்கள் வாயிலாக, ஃபீச்சர் ஃபோன்களை பயன்படுத்துபவர்களும் இப்போது பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இதற்கு நீங்கள் ஒரு ஐவிஆர் சேவை எண்-ஐ தொடர்பு கொள்ள வேண்டும், உங்கள் ஃபீச்சர் ஃபோனில் ஆப் பங்கஷனாலிட்டி இருக்க வேண்டு மற்றும் மிஸ்டு கால் அப்ரோச் பின்பற்ற வேண்டும். நான்காவதாக, சவுண்ட்-பேஸ்டு பேமெண்ட்களை மேற்கொள்ளலாம்.
இதுகுறித்த குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 14431 மற்றும் 1800 891 3333 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதில் ஐவிஆர் எண்ணை அழைப்பது, சாதாரண மொபைல்களிலுள்ள ஆப்களின் செயல்பாடு, மிஸ்டு கால் அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் ப்ராக்ஸிமிட்டி ஒலி அடிப்படையிலான கட்டணங்கள் ஆகியவை அடங்கும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த இணையம் தேவையில்லை. இந்த DigiSaathi எனப்படும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு மத்திய வங்கி 24x7 ஹெல்ப்லைனை வழங்குகிறது. தற்போது மிஸ்டு கால் வாயிலாக பேமெண்ட் செய்யும் அம்சத்தை எப்படி பெறலாம்? பின்வரும் படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம் எப்படி இதனை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்,
கடையில் காட்டப்பட்டுள்ள எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
- ஐவிஆர் அழைப்பைப் பெற்றவுடன் பண பரிமாற்றம் செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
- நீங்கள் ட்ரான்ஸாக்ஷன் செய்ய வேண்டிய தொகையை இப்போது உள்ளிடவும்.
- பின்னர் யுபிஐ பின்னை பதிவிட்டதும் பண பரிமாற்றம் வெற்றிகரமாக நடைபெறும்.