ஐஐடியில் மனிதமூளை குறித்தான அதிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் !!

மனித மூளை குறித்தான ஆராய்ச்சிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல மூளை செல்களை உயர் ‘Resolution’ல் நோக்கக்கூடிய அதிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் இன்று சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது
 ஐஐடியில் மனிதமூளை குறித்தான அதிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் !!

'சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் சென்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய மையத்தின் மூலம் மூளை செல்களின் வரைபடங்களையும் அதன் இணைப்புகள் பற்றியும் பன்மடங்கு நுண்ணியமாக ஆராய்ந்து தகவல்கள் பெற முடியும்.

இந்நிலையத்தின் முதல் ஆராய்ச்சியாக ‘Computational and Experimental platform for High resolution Terapixel Imaging of ex-vivo Human Brains’ என்ற திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இதை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்களுள் ஒருவரான பேராசிரியர். விஜயராகவன் மேற்பார்வையிடுகிறார்.

இங்கு நடத்தப்படக்கூடிய ஆராய்ச்சிகள் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் செயல்படக்கூடிய சிறந்த ஆய்வகங்களால் கண்காணிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ள ஆய்வகம் உலகின் முக்கிய ‘Neuroanatomy research’ சென்டர்களில் ஒன்றாக உயரக்கூடும்.

இதுகுறித்து இம்மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐஐடி மெட்ராஸின் மின்னணு பொறியியல் துறை தலைவரான பேராசிரியர். மோகனசங்கர் சிவப்பிரகாசம், "இந்தத் தொழில்நுட்பம் அறிவியல் உடனான மருத்துவத் துறையின் பிடிப்பை அதிக அளவில் ஏற்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com