ஆண்ட்ராய்டு போனில் 3 செயலிகளை நீக்கிய கூகுள் !!

வாடிக்கையாளர்கள் பதிவு செய்த புகார்களின் அடிப்படையில் 3 செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
ஆண்ட்ராய்டு போனில் 3 செயலிகளை நீக்கிய கூகுள் !!

அந்த 3 செயலிகளும் பணத்தை திருடும் புகாரில் சிக்கியுள்ளன. அதாவது, ஜோக்கர் என்ற மால்வேரை உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் அந்த செயலிகள் அனுமதிக்கிறதாம். ஜோக்கர் மால்வேர் என்பது வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த தகவல்களை திருடக்கூடியது.

இந்த புகாரில் சிக்கிய செயலிகள் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பிளட் பிரஷர் ஆப், ஸ்டைல் மெசேஜ் மற்றும் கேமரா பிடிஎப் ஸ்கேனர் ஆகிய செயலிகள் இந்த புகாரில் சிக்கி, கூகுள் பிளே ஸ்டோர் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒருமுறை இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால்போதும், ஜோக்கர் மால்வேர் உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும். இண்டர்நெட் கனெக்ஷன் இருக்கும் நேரங்களிலும் ஜோக்கர் ஆக்டிவேட்டாகிவிடுமாம்.

அந்த நேரத்தில் மால்வேர் ஆக்டிவேட்டாகி சில கவர்ச்சிகரமான கேம்களை காட்டுமாம். அதனை கிளிக் செய்தால் அல்லது சப்ஸ்கிரிப்சன் செய்தால் பணத்தை திருடும் செயல்பாடுகளை தொடங்கிவிடுமாம்.

இது குறித்த அப்டேட்டுகள் கிடைத்தவுடன், அதாவது செயலிகளின் நடவடிக்கை குறித்த தகவல் கிடைத்தவுடன் உண்மைத் தன்மையை ஆராய்ந்த கூகுள் நிறுவனம், 3 செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. கூகுளின் பாதுகாப்பு செட்டிங்ஸூகளை இந்த செயலிகள் பைபாஸ் செய்துவிடக்கூடியதாகவும் இருந்துள்ளது.

மேலும், பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் அடிக்கடி சப்ஸ்கிரிப்சன் செய்யுமாறு நோடிபிகேஷன் அனுப்பிக் கொண்டே இருக்குமாம். இவைதவிர மெசேஜ் மற்றும் மீடியா தகவல்களை அணுகுவதற்கான அனுமதியை கேட்டுக் கொண்டே இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com