பல நிறங்களில் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ : விரைவில் விற்பனைக்கு வருகிறது !!

கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பல நிறங்களில் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ :  விரைவில் விற்பனைக்கு வருகிறது !!

புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் கூகுள் பிக்சல் பட்ஸ் A சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் I/O 2022 நிகழ்வு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தான் டிப்ஸ்டரான ஜான் ப்ரோசர் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ விவரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதன்படி புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் - ரியல் ரெட், கார்பன், லிமான்செல்லோ மற்றும் ஃபாக் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்த இயர்பட்ஸ் மாடலுக்கான அறிவிப்பு கூகுள் I/O நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி கூகுள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

புதிய கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் பட்ஸ் A மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என தெரிகிறது. இந்தியாவில் பிக்சல் பட்ஸ் A மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com