டோர் : தி ஆனியன் ரூட்டர் என்பதன் சுருக்கம் தான் இந்த டோர் பிரவுசர், வெங்காயத்தின் உள்புறம் எப்படி பல அடுக்குகளால் பாதுகாக்கப்படுகிறதோ அதேபோல தான் இதில் நம்முடைய தகவல்களும் பாதுகாக்கப்படுகிறது. இதனை பயன்படுத்துவது திருட்டுத்தனமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் உங்களது ஐபி முகவரி மறைக்கப்பட்டு இருக்கிறது.
விண்டோஸ், லினக்ஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்டவற்றில் டோர் இலவசமாக இயங்குகிறது.
தனியுரிமை பாதுகாப்புகளில் குரோம் கொஞ்சம் மந்தமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கூகுளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு அதே சமயம் பாதுகாப்பான முறையில் சில பிரவுசர்களை பயன்படுத்தலாம், இதற்கென்று சிறப்பான பிரவுசர்கள் உள்ளன.
மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் : பயன்படுத்த மிகவும் எளிதான, பாதுகாப்பான மற்றும் வேகமான பிரவுசராக மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் சிறந்து விளங்குகிறது. இது பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த பிரவுசர் உங்களை பற்றிய குறைந்தளவு டேட்டாக்களை மட்டும் தான் சேகரிக்கிறது, இவை உங்களது மின்னஞ்சல் முகவரிகளை கூட சேமித்து வைப்பதில்லை.
விவால்டி : டாப் ஸ்டாக்கிங்கை பயன்படுத்த முயற்சி செய்யவில்லையெனில் விவால்டியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது ஒருபோதும் உங்கள் சுயவிவரத்தை விளம்பரப்படுத்தவோ, கண்காணிக்கவோ அல்லது திருடவோ செய்வதில்லை என்று உறுதியளிக்கிறது.
பிரேவ் : குரோமுக்கு மாற்றாக உள்ளார் பிரேவ் ஆனது ஆண்டி-ட்ராக்கிங் மற்றும் ஆட்பிளாக் பாதுகாப்புகளுடன் கூடிய சிறந்ததொரு பிரவுசராகும். இதில் நேரடியாக க்ரிப்டோ கரன்சி வாலட் இணைக்கப்பட்டுள்ளதால், இது க்ரிப்டோ பயனர்களுக்கு மிகவும் பிடதமான ஒன்றாக உள்ளது.
மைக்ரோசாஃப்ட் எட்ஜ் : மைக்ரோசாஃப்டின் புதிய பிரவுசர் சிறப்பாக செயல்படுகிறது, எட்ஜ் என்பது குரோமுக்கு நேரடியான மாற்றுகளில் ஒன்றாக உள்ளது. விண்டோஸ், மேகோஸ், லினக்ஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய தளங்களிலும் எட்ஜ் இலவசமாக கிடைக்கிறது.
ஓபரா : ஓபரா மிகவும் சிறப்பான பிரவுசர் என்று கூறாவிட்டாலும், இதில் அதிகளவில் குறைபாடுகள் எதுவும் இல்லை. இந்த பிரவுசர்கள் விளம்பரங்கள் மற்றும் ட்ராக்கர்களை தடுப்பதாக உறுதி அளிக்கிறது, இது பயனர்களுக்கு விபிஎன் ஆப்ஷனையும் வழங்குகிறது.