இப்போதைய சூழலில் ஒருவரின் மொபைலை யார் வேண்டுமானாலும் எடுத்து ஜாலியாக பயன்படுத்துகிறார்கள். இதனால், ஒருவரின் தனிப்பட்ட கூகுள் தேடல்களையெல்லாம்கூட பார்க்க வாய்ப்புகள் உள்ளன. சில டிப்ஸூகளை மட்டும் நீங்கள் பின்பற்றினால், உங்களின் கூகுள் ஹிஸ்டிரியை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளலாம்.
முதலில் கூகுள் பிரவுசருக்கு செல்லுங்கள். அங்கு பிரவுசரின் வலதுபக்கத்தின் மேல் மூலையில் 3 புள்ளிகள் இருக்கும். இந்த மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு பல விருப்பங்கள் திறக்கப்படும். அதில் ஹிஸ்டரி ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதனை நீங்கள் கிளிக் செய்தவுடன் மேலே Clear Browsing Data விருப்பம் இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்யவும். இப்போது பேஸிக் மற்றும் அட்வான்ஸ் என இரண்டு ஆப்சன்கள் உங்கள் முன் வரும். அதில் ஏற்ற விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அட்வான்ஸை நீங்கள் தேர்தெடுத்தீர்கள் என்றால், குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களின் கூகுள் ஹிஸ்டிரி தானாக அழிந்துவிடும்.
அந்தவகையில், நீங்கள் 24 மணிநேரத்திற்கு முன்பு, 7 நாட்களுக்கு முன்பு மற்றும் 4 வாரங்களுக்கு முந்தைய தரவை அழிக்கலாம் தானாகவே அழியுமாறு செய்துவிடலாம். இதன்மூலம் உங்களின் கூகுள் ஹிஸ்டிரியை யாரும் பார்க்க முடியாது.