வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு வரும் உற்சாக அப்டேட் !!

100 எம்.பிக்குப் பதிலாக இனிமேல் 2ஜிபி : வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு வரும் உற்சாக அப்டேட்
வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு வரும் உற்சாக அப்டேட் !!

அடுப்பங்கரையில் சமையல் செய்ய டிப்ஸ் ஃபார்வர்டு செய்வது முதல் ஆபீஸ் பணிகளை பரிமாறிக்கொள்வது வரை என, உலகமே இன்று வாட்ஸ் ஆப்பில்தான் இயங்கிவருகிறது. நாளுக்குநாள் பெருகிவரும் பயனர்களைத் தக்கவைக்கும் முயற்சியாகவும், போட்டி நிறுவனங்களை முந்திக்கொண்டு பயனர்களுக்கு முதலாவதாக வசதிகளை அறிமுகம் செய்யும் விதமாகவும் அவ்வப்போது பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது வாட்ஸ் ஆப் நிறுவனம்.

அண்மையில், வாய்ஸ் மெசெஜ் வசதியில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்த வாட்ஸ் ஆப், வாய்ஸ் மெசேஜை pause செய்து அனுப்பிக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் தற்போது புதிய வசதி ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாம் அந்நிறுவனம். வாட்ஸ் ஆப்பில் தற்போது 100 எம்.பி வரைக்கும் மட்டுமே ஃபைல்களை அனுப்பும் வசதி இருந்துவருகிறது. பெரிய ஃபைல்களை அனுப்புவதானால் அவற்றை ஒரே நேரத்தில் அனுப்ப இயலாது. இந்நிலையில் இதில்தான் தற்போது புதிய வசதியைக் கொண்டுவரவுள்ளதாம் வாட்ஸ் ஆப்.

அதன்படி, 100 எம்.பிக்குப் பதிலாக இனிமேல் 2ஜிபி வரைக்கும்கூட ஃபைல்களை அனுப்பிக் கொள்ளமுடியுமாம். வாட்ஸ் ஆப்பின் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் இதற்கான சோதனை முயற்சிகள் நடந்துவருவதாகவும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இது கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்தத் தகவலானது வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com